இலங்கையில் பெரும்தொற்று கொரோனா பேரிடலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் பொருட்டு மருத்துவமனை உபகரணங்களைப் பெற, தங்களுடைய சம்பளத்தை நன்கொடையாக வழங்க இலங்கை எதிர்கட்சி முன்வந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு முக்கியமான இத்தீர்மானத்தை இதில் எடுத்துள்ளது.
அதன் அடிப்படையில், கொரோனா பேரிடலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் பொருட்டு மருத்துவமனை உபகரணங்களைப் பெற, தங்களுடைய சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர்.இந்த செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேசமயம் தமிழர் தரப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் தங்கள் ஊதியத்தை கையளிக்க திட்டமிட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த சி.வி.விக்கினேஸ்வரன் நிலைப்பாடு தெரியவரவில்லை.
அதேசமயம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதாகத் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன், இதுவரை 200 மரணங்கள் யாழ் மாவட்த்தில் மட்டும் பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், யாழ். மாவட்டத்தில், கொரோனா அபாயம் மிக தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தம் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது மிகவும் சிறந்தது என்றார்.
தற்போது, தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை சராசரியாக 130 வரை காணப்படுவதாகத் தெரிவித்த அவர், இது மிகவும் மோசமான அதிகரிப்பாகும் எனவும் கூறினார்.
"அத்துடன், யாழ். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 36 ஆயிரம் பேர் வரை மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும், கணிசமானவர்கள் தடுப்பூசியைப் பெறாமல் உள்ள நிலையில், இராணுவத்தின் பங்களிப்புடன் இயலாத வீடுகளில் இருப்பவர்களுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி ஏற்றம் இடம்பெற்று வருகிறது" என, அவர் மேலும் தெரிவித்தார்.அத்துடன் தடுப்பூசி போடாதவர்கள் விரைந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் அதுவே இந்த பெரும் தொற்றிலிருந்து மக்களை காக்கும்.
0 Comments