Ad Code

புதிய பிரதமர் ரணில்

 இலங்கையின் புதிய  பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளார் 

பதவி ஏற்றவுடன் அவர்  இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க  நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். 



ரணில் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதே அவரது முதன்மையான பணியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதற்கமைய எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் புதிய பிரதமர் ரணில்  கூறியுள்ளார்.


அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதமர்  தெரிவித்துள்ளார்.


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றையதினம் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நெருக்கடியான நேரத்தில் வின்ஸ்டன் சேர்ச்சில் எப்படி பிரதமரானாரோ அதேபோன்றே தானும் பிரதமராக பதவியேற்றுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க அதிரடியாக தெரிவித்துள்ளார்.


பிரதமராக பதவியேற்ற பின்னர் பிரித்தானிய  ஊடகவியலாளர் ஒருவர் கேட்டகேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கேள்வி- நீங்கள் நாடாளுமன்றத்தில் எந்த கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்றீர்கள் ?இலங்கையின் பிரதமராக பதவி வகிப்பதற்கான தார்மீக ஆணை உள்ளதாக ஏன் கருதுகின்றீர்கள்?


ரணில் – 1939 இல் சேர்ச்சிலிற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே காணப்பட்டது- அவர் எப்படி பிரதமரானார்? நெருக்கடி காரணமாகவே அவர் பிரதமரானார்- நானும் அதனையே செய்திருக்கின்றேன் – வரலாற்றை படியுங்கள் என தெரிவித்துள்ளார்.


அதே சமயம் புதிய பிராமருக்கு முன்னாள் பிரதமர் மகிந்த  ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.


குறித்த பதிவில்,


இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்துக்கள், இந்த இக்கட்டான காலகட்டத்தில் பிரதமராக பயணிக்க நான் உங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்"' எனக் குறிப்பிட்டார்.


தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் தொடர்பில்  எம்.ஏ.சுமந்திரன் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.


"அரச தலைவர் முற்றாக சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார், மக்கள் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணைக்கு நாடாளுமன்றம் விரைவில் வாக்களிக்கவுள்ளது.


ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆரம்பத்திலிருந்தே தற்போதைய நாடாளுமன்றத்தில் சட்டபூர்வத்தன்மை இல்லை. அவர் தனது தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Close Menu