Ad Code

இன்று வரும் சசிகலா (08.02.2021) வரவேற்க தயாராகும் சசிகலா ஆதரவு தொண்டர்கள்

 

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பு செய்த  வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து தை மாதம்  27ஆம் தேதி விடுதலையானார். விடுதலை செய்யப்படும்  நேரத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று உறுதியையாகியது .அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சைக்காக பெற சசிகலா அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தீவிர சிகிச்சையால் பலனாக குணமடைந்த சசிகலா  மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். அதன்பின்பு சசிகலா மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூரு அருகே உள்ள பண்ணை வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பெரும் வரவேற்புடன்  தமிழகத்தில் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

சசிகலா பெங்களுருவிலிருந்து மகுளுந்து மூலமாக தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க அதிமுக மற்றும் அமமுக சேர்ந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் சசிகலா வரும்  பகுதி எங்கும்  சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமமுகவினர் முடிவு செய்துள்ளனர்.சசிகலா வரும் வழி  எங்கும் பட்டாசுகள்கொளுத்தி பெரும் வரவேற்பு கொடுக்க தினகரனின் அமமுக தொண்டர்கள் மற்றும் சசிகலா ஆதரவு அதிமுக தொண்டர்களும் தயாராகி வருகிறார்கள் இதானால் இன்று தமிழகம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.
தமிழகம் பரபரப்பாக காணப்படும் அதேவேளையில் தமிழக அரசுக்குள் பரபபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் இருக்கும் அரசு சிறையில் இருந்து விடுதலையாகி வரும் சின்னம்மா சசிகலா அவர்களால் உருவாக்கப்பட்டது ஆனாலும் காலம் கடந்து போக நிலமையும் மாற்றமடைந்துள்ளது. 
சசிகலா தேர்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சசிகலாவுக்கு எதிராக மாறி இருக்கிறார் ஆனாலும் சசிகலா ஆதரவு அதிமுகவில் பலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலா வந்தபின் பல அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் சந்திப்பார்கள் என இரகசிய தகவல்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கிடைத்துள்ளதாகவும் இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெரும் சங்கடத்துக்கு உள்ளாகி உள்ளார்.  
அத்துடன் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சசிகலா பற்றி பேச்சுக்கு மௌனமாக இருந்து வருவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்டம் காண வைத்துள்ளது யார் யார் எந்த பக்கம் என்பதை கணிப்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.

சசிகலா வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, கட்சிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று பலமுறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  சொல்லி வருகிறார் .. சசிகலா அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று ஏற்கனவே டெல்லியில் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இதற்கு பிறகு, அவர் சசிகலா பற்றி வெளிப்படையாக யாரிடமும் எதுவும் பேசவே இல்லை.. ஆனால், அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கும்போது மட்டும், தனிப்பட்ட முறையில் அவர்களிடம் மனம் விட்டு பேசியுள்ளார். அதாவது சசிகலா இருக்கும் போது சுகந்திரமாக நீங்கள் இருக்கவில்லை ஆனால் நானோ உங்களுக்கு முழு சுகந்திரம் தந்துள்ளேன் நீங்கள் மீண்டும் சசிகலாவுடன் சென்றால் எனது மற்றும் உங்கள் சுகந்திரம் பறிக்கப்பட்டு அவர்களின் கால்களில் விழுந்து கிடைக்க வேண்டியதுதான் ஆகவே நீங்கள் என்னுடன் இருந்து உங்களுக்குக் தேவையானதை பெற்றுக்கொள்ள வேண்டியதுதான் ஒரே வழி என குமுறியுளளதாக தெரிவிக்கப்படுகிறது .


என்ன பிரச்சனை வந்தாலும் நான் உங்களுடன் இருப்பேன் நீங்களும் என்னுடன் விசுவாசமாக இருந்து இந்த அரசை பாதுகாக்க வேண்டும் அத்துடன் வரும் தேர்தலில் இப்போது உள்ள அனைத்து சடடசபை உறுப்பினர்களுக்கும் நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவேன் எனவே நீங்கள் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளதாக உள் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சுமந்திரனின் STF பாதுகாப்பும் நன்றிக்கடனும் 

"பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை" என்ற தமிழ் மக்களின் பேரணி தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம். அதில் அரசியல் உரிமையாக பிரகடனப்படுத்தப்பட்ட மற்றும் நீதிக்கான பிரகடனம் என்பன, தமிழ்த் தேசிய கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமது பிரகடனங்களாக சொல்லி வாக்கு கேட்ட தீர்மானங்கள் ஆகும் . 

சிறிலங்கா அரசின் நெருக்கடிகளுக்கு மத்தியில் நடக்கும் பாதைகளை மாற்றி மாற்றி, நாட்களை நீடித்து, நிறைவடையும் இடங்களை கூட வெளிப்படையாக சொல்லாமல் வெற்றிகரமாக நடந்து முடிந்த வரலாற்று பேரணியாக பார்க்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலத்தை செயலில் இணைத்த பேரணி அது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் தரப்பு, பேரணியை இடைநடுவில் குழப்பியது. பேரணி நிறைவில் வேலன் சுவாமிகளை அரசியல் தீர்மானங்களை வாசிக்க கூடாது என குழப்பியது. பேரணி பிரகடன நிகழ்வுக்கு செல்லாமல் தேவையற்ற குழப்பத்தை உருவாக்கியது. 

அதன் பின்னர், பேரணியின் கனதியை குறைக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இப்போது ஊடகங்களுக்கு எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லி செய்யவில்லை என்கிறார் சுமந்திரன். 

வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என வானதிர குரல் எழுப்பியது எதற்காக? கிழக்கிலிருந்து வடக்குக்கு பேரணியாக நடந்தது எதற்காக? 

ஆனால் சுமந்திரன் இப்படித்தான் கதைக்கவேண்டும் செயற்படவேண்டும் என்ற தேவையிருக்கிறது. மக்கள் பேரணியில் கலந்து கொண்டால்தான்,  பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதியாக சர்வதேச பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்வார்கள். மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி செல்வாக்கானவர் என காட்டிக்கொள்ள வேண்டுமென்றால் எஸ்ரிஎப் இருக்கவேண்டும். அதற்கு எசமான் விசுவாசம் காட்டவேண்டும். இப்போது STF மீள கிடைப்பதை வேகப்படுத்துகிறார் சுமந்திரன். 

இது தான் சுமந்திரனின் இன்றைய நிலை. 

இதனைதவிர, பேரணி பிரகடனம் பற்றி தமிழர்களுக்கு எதிராக பரப்புரை செய்வதற்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லை. 

இதனை நாம் புரிந்துகொள்கிறோமா?


Post a Comment

0 Comments

Close Menu