Ad Code

தமிழர் அகிம்சை போராட்டம் தற்பொழுது பொலிகண்டியை அடைந்துள்ளது .

 பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை தமிழர் வழி போராட்டம் தற்பொழுது பொலிகண்டியை  அடைந்துள்ளது .


ஐந்தாம் நாளான இன்று (07) காலை  கிளிநொச்சியில்  பேரணி ஆரம்பமானது முகமாலையை வந்தடைந்த போது மக்கள் அணிதிரண்டு யாழ்ப்பாணத்துக்கு பேரணியை வரவேற்றனர். அதனை  தொடர்ந்து யாழ்ப்பாணத்தை அடைந்து தனது இலக்கான பொலிகண்டியை அடைந்துள்ளது 


வடக்கு - கிழக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து   மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.


தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நடத்தகப்பட்ட இனவழிப்புக்கு நீதிவேண்டியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு  வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல மதங்களைச் ​சேர்ந்தவர்களும் ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் ​இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது.இதில் கட்சி , மத பேதமின்றி தமிழர்கள் அனைவரும் கலந்துகொண்டனர் .


இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி தொடங்கிய நாள் முதல் ஸ்ரீலங்கா காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுகளை பெற்று பேரணியை தடுக்க முற்பட்டனர். ஆனால், அவர்களின் எண்ணங்களை தவிடுபோடியாக்கி, தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தை  சிறிதும் சலனமில்லாமல், தொடர்ந்து வெற்றிகரமாக பேரணியை நடத்தி முடித்துள்ளனர்.


இந்தப் பேரணியின் ஒரு பகுதியாக, தமிழின மாபெரும்  அழிப்பு நிகழ்ந்த முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் நடந்த இடத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு தீபம் ஏற்றி, யுத்தத்தில் உயிர் நீக்க தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.


அத்துடன் யாழ்ப்பாணத்தில் அண்மையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை அதே இடத்தில் மீண்டும் நிறுவதற்கான மணலை அங்கிருந்து மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். தமிழர்கள், முஸ்லிம்கள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின் இறுதி நாளன்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் கூட்டமொன்று நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய தமிழர்கள்  அதிக அளவில் காண முடிந்தது.


ஏன் இந்தப் போராட்டம்?


பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்  கலந்துகொண்ட இந்தப் பேரணிக்கு என்ன காரணம் என்பது குறித்து போராட்டத்தில் பங்குபற்றியவர்கள்  கூறுகையில், "கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள்  எங்கள் சுய நிர்ணய உரிமையை பெற போராடிக்கொண்டு வருகிறோம். தமிழர்களாகிய நாங்கள் இலங்கையின் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைந்த நிலப்பரப்பை தாயகமாக கொண்ட தேசிய இனம். எங்களது இந்தப் பிறப்புரிமை ஸ்ரீலங்கா அரசால் தொடர்ச்சியாக மறுதலிக்கப்பட்டு வருகிறது.


எங்களை அடக்கி ஆளவேண்டும் என்பதில்தான் ஸ்ரீலங்கா இனவாத  அரசு குறிக்கோளாக இருக்கிறது. பௌத்த பேரினவாத இலங்கை அரசு, தமிழர்கள் மீதான இன அழிப்பை இன்றும் 7தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பிரித்தானிய 7 காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது முதல் இன்று வரை எங்கள் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம். வன்முறை கொண்டு எங்களை அடக்க பார்த்ததின் விளைவாக தமிழீழ ஆயுதப் போராட்டத்துக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.


இரக்கமற்ற பேரினவாத இலங்கை அரசினால் கொத்துக்கொத்தாக எங்கள் தமிழ் உறவுகள் கொல்லப்பட்டனர். கொடூர இனவழிப்பு யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்தச் சூழலிலும், ஸ்ரீலங்கா அரசு தமிழர்களின் கலாசார - பண்பாட்டு அடையாளங்களை அழித்து வருகிறது. தமிழ் இனத்தின் தேசியத்தை சிதைவடையச் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஈழத் தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்ய வேண்டும் எனபதுதான் பேரினவாத இலங்கை அரசின் ஒரே குறிக்கோள்.


அதன் ஒருபகுதிதான் பௌத்த மயமாக்கல் மற்றும் தமிழர்களின் வாழ்  நிலங்களை ஆக்கரமித்து பௌத்த சிங்கள குடியேற்றத்தை அனுமதிக்கும் அராஜக போக்கு. வட கிழக்கில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் சைவ ஆலயங்கள் கையக்கப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில், பௌத்த விகாரங்கள் அமைக்கப்படுகின்றன. இப்படியான பௌத்த, சிங்களமயமாக்கள் உடனடியாக நிறுத்தபட வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்.மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவரும் தமிழ் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான கொலை அச்சுறுத்தல், மனித உரிமை மீறல், அடக்குமுறைகள் கைவிடப்பட வேண்டும். தமிழர்களின் பூர்விக நிலங்களில் காடுகள்  அழித்தொழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் அமைக்கும் தமிழர் இன விரோத நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். அதேபோல தமிழர்களின் அடிப்படை நினைவேந்தல் உரிமைகளை தொடர்ச்சியாக மறுதலிக்கும் வகையில், நினைவுத் தூபிகள், அடையாளங்களை அழிக்கும் நடவடிகைகளை ஸ்ரீலங்கா அரசு உடனடியாக கைவிட வேண்டும்.


பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை பயன்படுத்தி, தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட இளைஞர்களை கைது செய்வது, இஸ்லாமியர்களின் மத ரீதியான பாரம்பரிய சடங்குகளாள ஜனாசாக்களை புதைக்கும் செயல்களை தடுப்பது உள்ளிட்டவற்ற சிங்கள பௌத்த பேரினவாத ஸ்ரீலங்கா  அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்" என்று  போராட்டக்காரர்கள் தெரிவித்தார்கள் 


 அதேநேரத்தில், சர்வதேச அரங்கில் கவனம் ஈர்த்துள்ள இந்த அமைதிப் தமிழர் போராட்டம், இலங்கை அரசை சற்றே அசைத்துப் பார்த்துள்ளது என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.


Post a Comment

0 Comments

Close Menu