பலகோடிப் பணம் வைப்பகத்தில் கம்பி எண்ணும் கூட்டம்
யாழ்ப்பாணம் .மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வைப்பகத்தில் (வங்கி ) கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ளமை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந் நிலையில் குறித்த இளைஞனுக்கு தெரிந்த யாரேனும் ஒருவர் இணைய வைப்பகத்தில் (வங்கி ) ஊடாக திருட்டு தனமாக சுருட்டிய பணம் இவ்வாறு வைப்பிலிடப்பட்டிருக்கலாம் என புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சுமார் 490 கோடி கனடா நாட்டு டொலர் என்ற அடிப்படையில் 4 தடவைகளுக்கு குறையாமல் இவ்வாறு குறித்த இளைஞனின் வைப்பக கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இந்த பணம் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டால் இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடையும் என கூறப்படுகிறது.இதனால் இலங்கை அரசும் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பணத்தை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பாக மத்திய வங்கியும், பண பரிமாற்ற புலனாய்வு பிரிவும் மிகுந்த எச்சரிக்கையுடன் அவதானத்துடனும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் குறித்த இளைஞன் மத்திய வங்கியுடன் தொடர்பு கொண்ட நிலையில் தனது கிராம சேவகர் ஊடாகவும், பிரதேச செயலர் ஊடாகவும் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை மறுபக்கம் அரசியல் பின்புலம் உள்ள சிலரும், ஊடகவியலாளர்கள் போல வேடம் தரித்த சிலரும் குறித்த பணத்தை வெளியில் எடுத்து தருவதாக கூறி இளைஞனை சுற்றி வருவதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தே சமயம் சமீபத்தில் கிடைத்த செய்தி ஒன்று
'ஒரு லட்சம் கோடி வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.'
வவுனியா காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இவர்கள் சாதுரியமாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் வவுனியா காவற்துறையினரின் விசாரணைகளின் மூலம் தெரியவருவதாவது,
வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிலர் தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்ததுடன், அவரது வைப்பக கணக்கில் கோடி ரூபாய் பணம் அமெரிக்க நாட்டிலிருந்து வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதனை வெளியில் எடுப்பதற்கு உதவி செய்வதாகவும் தெரிவித்து, 7500 கோடியை தங்களுக்கு தருமாறும் 2500 கோடியை குறித்த இளைஞருக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.இந்த தொகையை பார்க்கும் போது உங்களுக்கு தலை சுற்றினால் நாங்கள் அதற்க்கு பொறுப்பல்ல .
இந்த பண விடயம் தொடர்பாக அந்த இளைஞரும் கடந்த வருடம்(2020) 6 ஆம் மாதத்திலிருந்து அந்த குழுவினருடன் இணைந்து கொழும்பில் தங்கிவந்துள்ளார். இதேவேளை கொழும்பில் வைத்து அவரது வங்கிகணக்கில் ஒரு இலட்சம்கோடி மதிப்பிலான இலங்கைரூபாய் வங்கி கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக அந்த குழு இளைஞரிடம் தெரிவித்துள்ளது.
எனினும் பணம் எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் அவர் வவுனியாவிற்கு திரும்பி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் அந்த இளைஞரை மீண்டும் தொடர்புகொண்ட அந்த குழுவினர் பணத்தை மீட்பதற்காக கொழும்பு செல்வதாக தெரிவித்து அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி அழைத்துச்சென்றுள்ளனர். குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அதேசமயம் அந்த இளைஞரை அவர்கள் வற்புறுத்தி ஏற்ற முற்பட்டுள்ளார்கள்.இதனை அவதானித்த அவனது நண்பன் வவுனியா காவற்துறைக்கு தகவல் வழங்கினார்.
இந்நிலையில் இளைஞனின் நண்பன் வழங்கிய தகவலிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு காவற்துறையினர் குறித்த அந்த குழுவினரை கைதுசெய்தனர்.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா குற்றத்தடுப்பு காவற்துறையினர் அந்த இளைஞனிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளதுடன், இது தொடர்பாக மத்திய வங்கிக்கும் தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அந்த பணம் எடுப்பது தடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட 6 நபர்களும் கொழும்பு, அவிசாவளை, குருநாகல், மற்றும் வவுனியா போன்ற பகுதிகளை வசிப்பிடமாக கொண்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய மூன்று சொகுசு வாகனங்களும் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
அந்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தால் அவரை கடத்திச்செல்லும் நோக்குடன் அந்த குழு வந்திருக்கலாம் என காவற்துறை தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதே சமயம் இது போன்ற குற்றச்செயல்கள் நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது அதாவது வெளிநாட்டில் உள்ள நபர்கள் தாம் திருட்டுத்தனமாக எடுக்கும் பணத்தை இலங்கையில் உள்ள நபர் ஒருவரின் கணக்கில் இணையவழி மூலம் மாற்றி அவர்களிடம் பின்னர் பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள் இப்படி செய்வதற்கு அந்த கணக்காளருக்கு குறித்த தொகை பணம் வழங்கப்படுகிறது.
இப்படியான பணம் அதிக அளவில் வந்தால் மத்திய வைப்பகம் சுதாரிப்பதால் சில குற்றச்செயல்கள் பிடிபடுகின்றன பல பிடிபடாமல் நடைபெறுகினறன. இதற்க்கு இலங்கை அரசு தனிபடை காவற்துறை அமைத்து விசாரித்து வருகிறது.
இப்படியாக உங்களிடம் உங்கள் கணக்குக்கு பணம் போடுகிறோம் அதை எடுத்து தந்தால் உங்களுக்கு பத்தி தருகிறோம் என்று யாரும் உங்களிடம் கேடடால் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் பணத்துக்கு ஆசைப்பட்டது இறுதியில் பணமும் இன்றி எதுவும் இன்றி கம்பி எண்ணிக்கொண்டு இருக்கும் நிலைக்கு போகவேண்டியதுதான் ஆகவே இப்படியான செயற்பாடுகளை தவிர்த்து உழைத்தது முன்னேற வழியை பாருங்கள் . ஆசை வார்த்தைகளை நம்பி உங்களையும் உங்கள் உறவுகளையும் துன்பத்துக்கு உள்ளக்காமல் சட்டதுக்கு உற்பட்டு உங்கள் வருமானத்தை உயர்த்திக்கொள்வதே இன்றைய நிலையில் சிறந்தது ஆகும்
0 Comments