Ad Code

எந்த தடை வந்தாலும் போராட்டம் தொடரும் -M.A.சுமந்திரன்

பொத்துவில் தொடக்கம்  பொலிகண்டி வரையான நடைபவனி போராட்டம் இலங்கை வாழ்  சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல  என, தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு M.A.சுமந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை சிவன் கோவில் முன்றலில்  பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவணியில் கலந்துகொண்டு, செய்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்  போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த சுமந்திரன்   இந்த அரசாங்கத்தின் சிறுபான்மை மக்களுக்கான எதிரான நடவடிக்கையை கண்டித்தும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்குமே இந்தப் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம்  நடைபெருகின்றது எனவும் அது ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானது இல்லை என்று தெரிவித்தார்.

பத்து அம்ச  கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடை பவனி நடைபெறுவதாகத் தெரிவித்த சுமந்திரன்  வடக்கு கிழக்கின் தெற்கு முனையில் இருந்து வடமுனையை நோக்கிய தமிழர்  பயணம் தொடர்கின்றது எனவும் கூறினார்.

இந்த போராட்டததை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் பலமுனைகளிலும் முயற்சித்ததாகத் தெரிவித்த சுமந்திரன், எனினும், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்ட நடைபவனி தொடரும் என்று தெரிவித்தார்.

"இந்நாட்டில், சிங்கள பௌத்த மக்களுக்கு இருக்கும் சகல உரிமைகளும் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கும் உண்டு ஏனெனில் நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்றாலும் இலங்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சுதந்திரதின நிகழ்வில் பேசும்போது, நான் சிங்கள பௌத்தன் என்று தெரிவித்தார். எனினும், அது எங்களுக்கு பிரச்சினை  இல்லை. ஆயினும் இந்நாட்டின் ஜனாதிபதி நான் சிங்கள மக்களுக்கும் மாத்திரம் சேவையாற்றுவேன் என்று தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். 

"எங்களுக்கும் இந்நாடு சொந்தமானது. நாங்களும் வசிக்கின்றோம். அதோபோல், சிங்கள மக்களும் இந்நாட்டில் வசிப்பதற்கான உரிமை உள்ளது. எங்களின் உரிமைகளை அவர்கள் அகற்றமுடியாது. இதன் அடிப்படையில், நாங்கள் இந்த நடைபவனியை மேற்கொள்கின்றோம்" எனவும் சுமந்திரன் கூறினார்.

இன்று, இந்தப் பேரணிக்கு  எந்த எதிர்ப்புத்தன்மையையும் அவர்கள் காட்டவில்லை . எனத் தெரிவித்த அவர்,  தனக்கு எதிராகவும் சில பிரதேச நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெறப்பட்டதாக அறிந்த்தாகவும் ஆனால், தனது கைகளில்  அது கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறினார்.

அரசாங்கம் எவ்வழிகளிலும் தடை செய்ய முயற்சித்தாலும் தனது நடைபவனி தொடரும் எனவும் சுமந்திரன் தெரிவித்தார். 

போராட்டம் நடந்துவரும் பொழுது ஸ்ரீலங்கா அரசானது தனது அரச அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர்கள் அகிம்சை வழி போராட்டத்தை கடும் பிரயத்தனம் கொண்டு அடக்கி வருவது தொடர்ந்து நிகழ்ந்து வருவது தமிழ் மக்களுக்கு பழகிப் போனதுதான்.
 
அடக்கு முறை என்ற ஆயுதத்தை பயன்படுத்தும் இலங்கை அரசுக்கு அகிம்சை என்னும் ஆயுதத்தை தமிழர்கள் பயண்படுத்தி வருகிறார்கள் இனிமேலும் பயன்படுத்துவார்கள்.

எத்தனை அடக்கு முறைகளை பயன்படத்தினாலும் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி தனது இலக்கை நோக்கி பயணிக்கும் அதுவே இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைக்குரலை உலகுக்கு எடுத்து பறை சாற்றும். 

Post a Comment

0 Comments

Close Menu