Ad Code

இது தான் அடுத்த மாதம் நடக்கும்

ஐ நா மனிதவுரிமை சபை கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அது பற்றிய கருத்தாடல்களும் , அந்த கூட்டத்தொடரில் என்ன நடக்கும் என்கிறவகையறான கருத்தாடல்களும் தமிழ் தேசிய பரப்பில் சூடு பிடித்துள்ளது 
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் தங்கள் தங்கள் அரசியல் சார்ந்து , தங்கள் தங்கள் அறிவு கொண்டு ஒவ்வொரு வித கருத்துக்களை கூறி கொண்டிருக்கிறார்கள் 

இதில் என்ன நடக்கும் , என்ன வகையான முன்நகர்வுகள் இருக்க கூடும் என்று ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தாலும் தங்கள் தங்கள் எதிர்கால அரசியல் நகர்வுகளை கருத்தில் கொண்டே அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள் 

கடந்த இரண்டு நாளுக்கு முன்னர் சிவில் சமூகங்களின் செயல்பாட்டாளரும் , சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் கருத்து ஒன்றை முன்வைத்தார் 

" இந்த ஐ நாவின் கூட்ட தொடரில் தமிழர் எதிர்பார்க்கிற மாதிரியான தீர்மானங்கள் வர வாய்ப்பில்லை . ஆயினும் ஓரளவுக்கு முன்னைய தீர்மானங்களை விட தீர்க்கமான ஒரு தீர்மானம் வரலாம் " என்றார் . அதாவது " ஐ நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லுதல் " என்கிற தீர்மானம் எதுவும் வர வாய்ப்பில்லை என்பதே அவரின் கருத்தாக இருந்தது . 

அது தான் உண்மையும் கூட . ஏற்கனவே வந்திருந்த தீர்மானங்கள் மாதிரியே , ஆனால் கொஞ்சம் தீர்க்கமான  ஒரு தீர்மானம் வரவே வாய்ப்பு இருக்கிறது . அவர்கள் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்டுகின்ற அந்த தீர்க்கமான தீர்மானத்துக்கு ஒரு வழியில் காரணமாக  இருக்க போவது  " தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றாக முன் வைத்த கோரிக்கை "ஆகும் . 

கால எல்லைகள் குறிப்பிட்டு , இன்ன இன்ன காலங்களுக்குள் இன்ன விஷயங்கள் செய்து முடிக்கப்பட வேண்டும் என்று கட்டையிடுகிற பாணியில் அந்த தீர்மானம் இருக்கலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது . சுருங்க கூறின் இதுவரை ஐ நா மனிதவுரிமை பேரவையால் மேற்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்ப்பான செயல்பாட்டின் இன்னொரு கட்டமாகவே இது இருக்க போகிறது . 

இதுவரை மக்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பு மட்டுமே முன் வைத்த கோரிக்கைகளைனை உள் வாங்கி சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்த முறை கூட்டமைப்புடன் சேர்த்து மற்றைய  தமிழ் தேசிய மக்கள் பிரதிநிதிகளான தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் கோரிக்கைகளையும் உள் வாங்கி சில மாற்றங்களுக்குள்ளாகி வரும் 

இது தான் நடக்கப்போகிறது . இதை விட வேறு ஒன்றும் நடக்க போவதில்லை . இதற்கு அடுத்த மனிதவுரிமை சபை கூட்டத்தில் வேண்டுமானால் சில வேளைகளில் பாதுகாப்பு சபை க்கு கொண்டு போக சொல்லி சொல்லிட்டு மனிதவுரிமை சபை விலகி கொள்ளலாம் . ஆனால் இந்த மனிதவுரிமை சபை கூட்டத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை . 

உண்மை இது தான் . இதை தான் பலரும் பல்வேறு கோணங்களில் சொல்கிறார்கள் 

ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் சில சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது . தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதுவரை ஐ நா வின் மனிதவுரிமை பேரவை யையும் அதில் கூட்ட்டமைப்பு செயல்பட்ட  விதத்தையும் விமர்சித்தே அரசியல் செய்து வந்தது . 

இதுவரை வந்த தீர்மானங்களில் சிலவற்றை எதிர்த்தும் சிலவற்றில் அதில் கூறப்பட்ட சிலவற்றை மட்டும் வரவேற்றுமே கருத்துகள் கூறி வந்திருக்கிறார்கள் . கூட்டமைப்பால் தான் ஐ நா வின் பாதுகாக்காப்பு சபைக்கு இந்த பிரச்சனை பாரப்படுத்தப்படவில்லை என்றே பிரசாரம் செய்து , அந்த பிரசாரங்களின் பலனால் தான் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை பெற்றிருந்தார்கள் 

இந்த நிலையில் இந்த முறை அவர்கள் கூட்டமைப்பை மட்டும் குற்றம் சாட்டமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது  . ஏனெனில் கூட்டமைப்பு உட்பட எல்லோரும் சேர்ந்து " ஐ நா பாதுகாப்பு சபை " க்கு கொண்டு வாருங்கள் என்கிற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள் 

ஐ நா பாதுகாப்பு சபைக்கு பாரப்படுத்தாமல் , மீண்டும் மனிதவுரிமை பேரவையே இதை கையாண்டால் , அதை எவ்வாறு எதிர் கொள்வது என்பதே முன்னணியினர்  முன் உள்ள சவால் . 

மனிதவுரிமை பேரவை ஓரளவுக்கு காட்டமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால் , அதை வரவேற்க வேண்டிய நிலை அவர்களுக்கு இருக்கிறது . ஏனெனில் அவர்கள் தற்பொழுது இருப்பது நடைமுறை அரசியலில் . விமர்சன அரசியலில் இருபதுக்கும் நடைமுறை அரசியலில் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு 

அந்த வித்தியாசங்களை மக்களும் ஓரளவுக்கு உணர தொடங்கிவிட்டார்கள் . அந்த வித்தியாசம் தான் அவர்களை ஐ நா வுக்கான கடிதத்தில் ஒன்றாக கையெழுத்து வைக்க வைத்தது . 

ஆகவே ஐ நா இதுவரை கொண்டு வந்த தீர்மானங்கள் கூட்டமைப்பின் கருத்துக்களை உள் வாங்கி தான் என்றால் இந்தமுறை கொன்டு வரும் தீர்மானமும்  மக்கள் பிரதிநிதிகளான முன்னணியின் கருத்துக்களையும் உள் வாங்கியே என்பதில் மாற்று கருத்துக்கு இடமிருக்கப்போவதில்லை . 

எனவே இந்த முறை வர இருக்கும் தீர்மானம் கால எல்லைகளை கொண்ட கால அவகாசத்தை கொண்டமைந்தால் அந்த கால அவகாசத்தை பெற்று கொடுத்தது முன்னணி தான் என்று விமர்சன அரசியலில் தற்பொழுது இருக்கும் அனந்தி சசிதரன் , சுரேஷ் பிரேமசந்திரன் ஆட்கள் விமர்சனம் முன் வைத்தால் அதை ஏற்று கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் 

இதை எல்லாம் ஓரளவுக்கு உணர்ந்த முன்னணியினர் அந்த நிலையை எதிர்கொள்ள கூடியவாறு கருத்துக்களை இப்பொழுதே கூற தொடங்கிவிட்டார்கள் . 

ஆனால் கடந்தமுறைகள் மாதிரி கூட்டமைப்பு மற்றும் சுமந்திரனை கண்ணை மூடிக்கொண்டு விச்சிக்க முடியாத சூழ்நிலை அவர்களுக்கு . ஏனெனில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் ஐ நா வுக்கான கடிதத்தில் கையெழுத்து வைத்திருந்தார் . இரா சம்பந்தன் நிலைப்பாடு ஓன்று கூட்டமைப்பின் நிலைப்பாடு இன்னொன்றாக இருக்க போவதில்லை . அப்படி கூறினால் மக்களும் அதை ஏற்று கொள்ள போவதில்லை . இது அவர்களுக்கு தெரியும் . வழமை போல சுமந்திரன் வேறு நிலைப்பாட்டில் உள்ளார் என்றும் கண்ணை மூடிக்கொண்டு குற்றசாட்டு முன்வைக்க முடியாது . ஏனெனில் இந்த ஐ நா வுக்க்கான கடிதம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இறுதி செய்தது வரை மட்டுமல்லாது அதில் சம்பந்தன் ஐயாவின் கையெழுத்து பெற்றது வரை சுமந்திரனின் காத்திரமான பங்களிப்பு இருந்தது . 

இதற்கிடையில் P2P போராட்டத்தில் சாணக்கியன் , சுமந்திரன் உட்பட கூட்டமைப்புக்கு கிடைத்த நல்ல பெயர் வேறு அவர்ளுக்கு மேலும் சவாலாகி விட்டது . 

இப்படியே போனால் தங்கள் எதிர்கால அரசியல் கேள்விக்குறியாகிவிடும் என்கிற பயம் அவர்களுக்கு . அதனால் சுமந்திரன் மேல் பழி சுமத்த ஏதாவது  சந்தர்ப்பம் கிடைக்குமா ? என்று பார்த்து கொண்டிருந்தார்கள் . 

P2P யின் இறுதியில் ஏற்பட்ட சிறு குழப்பத்தை பயன்படுத்தி அதை சுமந்திரனுக்கு எதிராக திருப்பி விட முயன்றார்கள் . ஆனால் சுகாஸ் இன் கருத்துக்கு கிடைத்த விமர்சனங்கள் அவர்களது திட்டத்தை முறியடித்து விட்டது . 

அதன் பின்னர் தான் பாராளுமன்ற உரையை கையில் எடுத்தார் கஜேந்திரகுமார் . 

பாராளுமன்றத்தில் முதலில் பேசியிருந்த M A சுமந்திரன் அவர்கள் p2p போராட்டத்தின் தேவைப்பாடு ஏன் எழுந்தது என்றும் , அதன் மூலம் நாம் கேட்டு நிப்பது என்ன என்பதையும் விளக்கி பேசியிருந்தார் . அதனை தொடர்ந்து சில மணி நேர இடைவெளியில் பேசியிருந்த கஜேந்திரகுமார் அவர்கள் " சுமந்திரன் p2p யின் இணை கோரிக்கைளை வாசிக்க தவறியிருந்தார் , அதை நான் வாசிக்கிறேன் . அது பற்றியும் இந்த சபை அறிந்திருக்க வேண்டும் " என்று கூறி அதை வாசித்தார் 

ஆனால் அடுத்த நாள் காலையில் அவசரம் அவசரமாக கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து " சுமந்திரன் முக்கிய விடயத்தை கூறாமல் அரசை காப்பாற்ற பார்க்கிறார் " என்று பேட்டி கொடுத்தார் 

நேற்றைய தினம் ஐபிசி தமிழ் இன் நிகழ்ச்சி ஒன்றிலும் இதே மாதிரியான விடை ஒன்றை கூறுகிறார் . திரும்ப திரும்ப ஒரே மாதிரி சொல்லி " அது தான் அவர் " என்று நிரூபிப்பதில் வல்லவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் . அந்த தனது பழைய பார்மூலாவை தான் இதுலயும் பயன்படுத்துகிறார் 

சுமந்திரன் இணை கோரிக்கைக்கைகளை வாசிக்காமல் விட்டதை துரோகம் என்று சொல்லுகிற கஜேந்திரகுமார் அவர்கள் , தேச கோரிக்கை யை ஏன் ஐ நா வுக்கானகோரிக்கையில் உள்ளடக்கவில்லை என்கிற கேள்விக்கு  பின்வருமாறு விடை அளிக்கிறார் 

" மூன்று ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன . அதில் ஒன்றில் தேசத்துக்கான கோரிக்கை மற்றும் அரசியல் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட்டு இருந்தன " என்கிறார்  . இதே விடையை தானே சுமந்திரனும் கூறுகிறார் .  ஏன் p2P யின் எல்லா கோரிக்கைகளையும் வாசிக்கவில்லை என்ற கேள்விக்கு " முன்னர் எடுதகோரிக்கைகள் இவை தான் " என்று தானே கூறுகிறார் . அதாவது மற்றயவை இணை கோரிக்கைகள் என்கிறார் தானே . 

இதே கேள்வியை குமாரவடிவேல் குருபரனிடம் கேட்ட பொழுது " மூன்று ஆவணங்கள் பற்றி எதுவும் குறிப்பிட்டு சொல்லி இருக்கவில்லை " என்பது குறிப்பிட தக்கது . ஆயினும் கஜேந்திரகுமார் அவர்களும்  குருபரனும் ஒரு விஷயத்தை ஒரே மாதிரி சொல்லி இருந்தார்கள் 

" ஒரு விடயத்தை குறிப்பிடவில்லை என்பதற்காக அதற்கு எதிரான நிலைப்ட்டில் இருப்பதாக அர்த்தம் ஆகாது .

மேற்படி கருத்தை அழுத்தி சொல்லும் இருவரும்  "M A சுமந்திரன் குறிப்பிடாமல் விட்ட விடயத்தை " துரோக முத்திரை குத்த முனைவதன் நோக்கம் என்ன ??

" அரசாங்கத்தை காக்க முனைகிறார் சுமந்திரன் " என்கிற பொய்யான பரப்புரையை இப்பவே பரப்பி வைப்பதில் அவர்களுக்கு ஒரு நன்மை உண்டு 

ஐ நா வில் வரவிருக்கும் தீர்மானம் சுமந்திரன் அவர்களின் கருத்தின் படியே வந்தது . அவர் தான் வெளிநாட்டுதூதுவர்களை சந்தித்தார் . அரசை காப்பற்ற கூடிய கருத்துக்களையே அவர் அவர்களுடன் பகிர்ந்து இருப்பார் . ( நேற்றைய பேட்டியிலும் இதே கருத்தை சுட்டி காட்டி இருந்தார் ) அதனால் தான் பாதுகாப்பு சபைக்கு கொண்டு போகும் தீர்மானம் வரவில்லை என்று கூறி அவர்கள் தப்பித்து கொள்வார்கள் .

எல்லோரும் தமிழர் நலன் சார் விடயங்களில் கவனம் செலுத்த அவர்கள் மீண்டும் சுமந்தினை துரோகியாக காட்டும் நாலு ஊடகவியலாளர் மாநாடுகளில் பேசி கொண்டிருப்பார்கள் 

இது தான் அடுத்த மாதம் நடக்கும் 
ஆதிமயிலிட்டியூரான்

Post a Comment

0 Comments

Close Menu