இந்தியாவின் பிஜேபி ஆட்சியின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பீதி கிளப்பும் சேதி

ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த இலங்கை - இந்திய உறவில் பெற்றோல் ஊற்றிய நெருப்பு வைத்த வேலையாக ஒரு செய்தி வெளி யாகியிருக்கின்றது.


இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்து சக்திமிக்கவராக அறியப்படுபவர்  இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் அத்துடன் மைத்தியில் ஆடசி செய்யும்  ஆட்சித் தரப்பின் வெளிவிவகாரக் கொள்கைகளை கையாளும் விடயத்திலும் கூட  அதிகம் செல்வாக்குச் செலுத்துபவர் இந்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா .

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய பிரதமர்   நரேந்திர மோடியின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் அவரின் மிகவும் நம்ம்பிக்கைக்குரிய நெருங்கிய சகா அமைச்சர் அமித்ஷாதான்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பெயரில் வெளியான செய்தி தற்பொழுது பெரும் சர்ச்சையைக்கிளப்பியிருக்கின்றது.அது இந்திய மட்டும் அல்ல உலகம் முழுவது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையிலும் நேபாளத்திலும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியை அமைக்கும் திட்டம் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு உள்ளது. இவ்வாறு திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் தெரிவித்தா கருத்தியால் பெரும் சர்ச்சை  வெடித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இலங்கையிலும் நேபாளத்திலும் பா.ஜ.க அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டம் இருப்பதாக குறித்து தெரிவித்தார் என திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் கூறினார் என்று 'ஈஸ்ட் மோஜோ ' தெரிவித்துளது,

சனிக்கிழமை திரிபுராவிற்க விஜயம்  மேற்கொண்ட  இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைத்த பின் இலங்கை மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்ததாக  திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் தெரிவித்துள்ளார் இந்த அறிவிப்பு இலங்கை மற்றும் நேபாள நாட்டு அரசுகளை மிரள வைத்துள்ளது 

நேற்றைய  சந்திப்பின்  போது பாஜக பல இடங்களில் ஆட்சி அமைத்துள்ளது குறித்து தெரிவிக்கும் போது இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இலங்கையும் நேபாளமும் இன்னும் இருக்கிறது என்றும் அங்கு பாஜக வை விஸ்தரிக்க வேண்டும் அங்கும் பாஜக ஆட்சியை அமைக்க வேண்டும் என்று    திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ்   பாஜக   அமைச்சர் அமித்ஷா தெரிவித்ததாக தெரிவித்தார்.

இப்படி வெளியான செய்தியே இப்போது பெரும் அரசியல் இராஜதந்திர சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றது அத்துடன் பல நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது இந்த செய்தியை இன்னும் பாஜக தரப்பில் இருந்து மறுக்கும் எந்த அறிக்கையும் இன்னும் வரவில்லை.

என்றாலும் இத்தகைய செய்தியின் பின்னால் புதைந்து கிடக்கக் கூடிய தகவல்களை நோக்குவதும் இச் சமயத்தில் முக்கியமானது. 

கம்யூனிஸ்ட் சார்புடைய- இடதுசாரிப் போக்குக் கொண்ட -சீனாவே இந்தியாவின் அயல் தேசங்களில் இந்தியாவுக்கு அதிகம் தொல்லை தரக் கூடிய நாடாகும்.

இந்தச் சீனாவின் செல்வாக்குத் தனது பிற அயல்நாடு காரில் இலங்கையிலும், நேபாளத்திலும் தான் அதிகம் காலூன் நியுள்ளது என்று புதுடில்லி கருதுகின்றது. உதாரணமாக இலங்கையின் தீவுகளை இலங்கை அரசு சமீப காலமாக சீனாவுக்கு வழங்கி வருகிறது இதனால் இநதிய ஆளும் அரசு கடும் கோபமடைந்துள்ளது.

மேலும் மேற்படி செய்தியை வெளியிட்டவர் எனக் கூறப்படும் பா.ஜ.க. முதலமைச்சர் பிப்லாப் டெப் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிகமிக நெருக்கமானவர். நீண்ட காலம் சீனாவைப் போல  இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த திரிபுராவை, கம்யூனிஸ்ட்டுக்களின் பிடியிலிருந்து விடுவித்து. அங்கு பாரதீய ஜனதாக் கட்சியின்  ஆட்சியை நிறுவியவர்  .

அதேபோல, இலங்கையிலும், நேபாளத்திலும் காலூன்றியுள்ள சீனச் செல்வாக்கை இறக்கி, அங்கு பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியை நிறுவுவதுதான் தங்களின் எஞ்சிய பணி என பாரதிய ஜனதாக் கட்சியின் மூல வேரான அமித்ஷாவே தெரிவித்தார் என்று கூறுவது வெறுமனே  புறக்கணிக்க கூடிய விடயமே அல்ல

ஏற்கனவே இந்தச் செய்தி நேபாளத்தில் பெரும் பரபரப்பையும் இராதேந்திரச் சர்ச்சையையும் கிளப்பி விட்டிருப்பதாக அங்கிருந்து வெளியாகும் இணைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய கருத்து வெளியிட்டத்தின்  மூலம்  அல்லது அதணைக்கசி விடத்தின்  மூலம் - எதோ ஒரு செய்தியை அல்லது தகவலை சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு  இலங்கைக்கும் மற்றும் நேபாளத்திற்கும் புதுடில்லி உணர்த்தமுற்படுகின்றதா என்பதை சர்வதேச விடயங்களை நன்கு அறிந்தவர்கள் சந்தேக கண்ணுடன் உற்று நோக்கிறார்கள்.

இந்தியாவில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கே தாமரையை மலர செய்ய பல வழிகளில் முயன்று வரும் பாரதீய ஜனதாக் கட்சி அங்கே வெற்றி பெரும் என்ற நிலை தற்போது வரை இல்லாத சமயத்தில் தனது அயல் நாடுகளை கவர்ந்து கைப்பற்ற நினைப்பது மடமை தனமான நினைப்பு என பல  அரசியல் தமது கருத்தை தெரிவித்துள்ளார்கள் அத்துடன் இது ஒரு நகைப்புக்குரியடத்து எனவும் குறிவருகிறார்கள் 

ஆனாலும் பிராந்திய வல்லரசான இந்திய இலங்கை போன்ற சிறிய நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருது ஒரு சிறிய பிரச்சனையை எனவும் இந்திய நினைத்தால் அந்த நாடுகளை ஒரு மணி நேரத்த்துக்குள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனக்கு விரும்பிய ஆட்சியை அமைக்க முடியும் என்றும் இராணுவ வல்லுநர்களை மேற்கோள் காட்டி வரும் செய்திகளுக்கும் பஞ்சமில்லை.