Ad Code

இலங்கையில் அதிகரிக்கும் மரணம் -பிரித்தானிய தடை நீக்கம்

கொவிட்-19 புதிய திரிபு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, பிரித்தானியாவிலிருந்து இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை, உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் பரவி வரும் மாறுதல் அடைந்த கொரோனா வைரஸ் பரம்பலை இலங்கையில் பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடை கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது 

இதனிடையே இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று இடம்பெற்றுள்ளன. முன்னதாக 9 மரணங்கள் பதிவானமையே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிக கொரோனா மரணங்களின் எண்ணிக்கையாக அமைந்திருந்தது .

இந்தநிலையில்  நேற்றைய தினம் 13 கொரோனா  மரணங்கள் பதிவாகியதாகவும் , மொத்தமாக இலங்கையில் கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு ஒரு பெரிய அதிகரிப்பாகவும் இதனால் இலங்கை வாழ் மக்கள் வைத்திய அதிகாரிகளின் நடவடிக்கை அறிவுறுத்தல்களை பின்பற்றி வந்தால் மாத்திரமே இந்த கொடிய நோயை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .

நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் நுவரெலியா மாவட்ட அரசாஙக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் 11 ஆம் திகதி  அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் அக்கரபத்தனை வைத்தியசாலையிலிருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், மாசி மாதம  12 ஆம் திகதி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.


பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி  மரணித்தார்.


போம்புவல பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் தை மாதம் 5 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார். கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா மற்றும் உயர் குருதி அழுத்தம்(High Pressure)என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டது.

களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார். மோசமடைந்த மூச்சிழுப்பு நோய் தொற்று மற்றும் நுரையீரல் புற்றுநோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அவருக்கு கொரோனா தோற்றும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

நாபொட பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவர் மாசி மாதம்  10 ஆம் திகதி தனது வீட்டில் மரணித்தார். குருதி நஞ்சானமை, கொவிட்-19 தொற்று மற்றும் தீவிர நீரிழிவு நோய் நிலைமையை அவரின் மரணத்திற்கான காரணம் என குறப்படுகிறது .


மக்கொண பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார். கொரோனா  தொற்றுடன் ஏற்பட்ட இருதய நோய் மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் அதிகமானவர்கள் கொரோனாவுடன் வேறு நோய்களும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார். கொவிட் நியூமோனியா மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என வைத்திய பரிசோதனையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.


களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் மாசி மாதம் 5 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார். கொவிட்-19 தொற்றுடன் குருதி நஞ்சானமை மற்றும் இருதய நோய் நிலைமை அவரின் மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவர் கம்பளை அரச ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார். கொவிட்-19 தொற்று, நுரையீரல் நோய் நிலைமை மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணம் என வைத்தியசாலை தகவல்களில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று மரணமடைந்தார். கொவிட்-19 நியூமோனியா, குருதி நஞ்சானமை மற்றும் நுரையீரல் புற்றுநோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணம் என உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை வேவுட பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவர் கண்டி தனியார் வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 3 ஆம் திகதி கொரோனா காரணமாக மரணித்தார். கொவிட் நியூமோனியா மற்றும் தீவிர சிறுநீரக பாதிப்பு என்பன அவரது மரணத்திற்கான காரணம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொழும்பு நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவர் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டநிலையில் நேற்று உயிரிழந்தார். கொரோனா  தொற்றுடன் மோசமடைந்த இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் காரணமாக அவரின் மரணம் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் கொரோனா மரணம் கொரோனா என்ற நோயின் கொடிய தாக்கத்தை காட்டி நிற்கிறது ஆகவே மக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ள அரசாங்க அதிகாரிகள் கேட்டுகொண்டுள்ளார்கள் .

Post a Comment

0 Comments

Close Menu