Ad Code

இறுதியில் மாறிய ஓபிஸ் -தனித்து விடப்பட்ட சசிகலா

 இறுதியில் மாறிய ஓபிஸ் -தனித்து விடப்பட்ட சசிகலா 


முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தோழி சின்னம்மா என அழைக்கப்படும்  சசிகலா பக்கம் ஓபிஎஸ்  சாய்வதாக உள் தவல்கள் தெரிவிக்கினறன .. அதனாலேயே அவர் மீது மத்தியில் ஆளும் பாஜக அதிருப்தியில் இருக்கலாம் என்றும், சசிகலா மற்றும் அதிமுக இணைப்பை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இவ்வளவு காலமாக  ஒரு பேச்சு இருந்து கொண்டே இருந்தது.. வலிமை பொருந்தி வரும் திமுகவை தோல்வியடைய செய்ய  சசிகலா தலைமையில் கட்சிகளை ஒன்றிணைக்கலாம் என்ற யோசனை மத்திய ஆளும் பாஜக மேலிடத்துக்கு இருந்தது. இது சம்பந்தமாக எடப்பாடியாரிடம் பேசப்பட்டதாகவும், ஆனால் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் தெரிவித்தன.


இருப்பினும் , சசிகலா சிறையில் இருந்து  வந்தவுடன் இது சம்பந்தமான நடவடிக்கையை மத்திய பாஜக எடுக்கும் அல்லது பாரத பிரதமர் மோடி  சென்னை வந்த பிற்பாடு  இது தொடர்பாக ஏதாவது விஷயம் வெளிப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது எல்லாம் வெறும் கற்பனையாகவே  மறைந்து விட்ட்து மட்டுமன்றி , பாரத பிரதமரை தமிழக முதல்வர் எடப்பாடி மட்டும் தனியாக சந்தித்து பேசியது அதற்கு மேல் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. எனவே, இப்போது, BJP என்ன நினைக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.. 


பெரும்பாலும் தினகரனின்  அமமுக, அதிமுக கட்சிகளை இணைக்கும் முயற்சி அப்படியே நின்றுவிட்டதாகவே அறியப்படுகிறது .. மோடியை பொறுத்தவரை, சசிகலா தரப்பை வேண்டாம் என்று நினைப்பது போலவும் தோன்றுகிறது.. இதற்கு காரணம், அமமுக, அதிமுக வாக்குகள் ஒன்றாக இணைந்தால், கடசிகளின் இணைவு வாக்குகளின் இணைவாகும் அதனால்  திமுகவை வென்றுவிடலாம் என்றுதான் ஆரம்பத்தில் கணக்கு போடப்பட்டது..

ஆனால், இப்போது அப்படி ஒரு மன நிலையில் பாஜக இல்லை.. டிடிவி தினகரன் அன்று பெற்ற வாக்குகள் அனைத்துமே பாஜகவுக்கு எதிரான வாக்குகள்தான்.. அதிமுகவுக்கு எதிரான வாக்குகள்தான்.. அப்படி இருக்கும்போது, அவரை இப்போது கட்சிக்குள் சேர்த்தால், அந்த வாக்குகள் எல்லாம் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எப்படி வரும்? நிச்சயம் திமுகவுக்குதானே அந்த வாக்குகள் போகும் இது அதிமுக வுக்கு இழப்பாக  போய் முடியும் என்று எடப்பாடி தரப்பில் எடுத்து சொல்லப்பட்டதாம்..  இதனால் சசிகலா மற்றும் அதிமுக இணைப்பு என்ற மனநிலையில் இப்போது பாஜக இல்லை..அதனாலேயே சசிகலா வருகையை பாஜக தலைமை இப்போதைக்கு விரும்பவில்லை என தெரிகிறது.

அதே சமயம் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் விஷயத்தையும் இங்கே கவனிக்க வேண்டி உள்ளது.. அவர் தற்பொழுது  சசிகலா பக்கம் சாய ஆரம்பித்துள்ளது போல தெரிந்துள்ளது.. இவர் பாஜகவுடன் இணக்கமாகவேதான் ஆரம்பத்தில் இருந்துள்ளார்.. அக்கட்சி சொன்னபடிதான் அனைத்தையும் கேட்டு வந்துள்ள நிலையில், திடீரென சில உள்ளடி வேலைகளையும் ஓபிஎஸ் செய்ய ஆரம்பித்ததுதான் அதாவது  அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இரட்டை  வேடம் போடுவதாக அறியப்பட்டுள்ளது , இதனால் பாஜகவுக்கே கொஞ்சம் அதிருப்தியை தந்துவிட்டது .

சசிகலாவுக்கு ஓபிஎஸ் ஆதரவு தருவது என்பது, இனரீதியான பாசம், அல்லது விசுவாசம் எப்படி வேணும்னாலும் இது இருக்கலாம். இதைதவிர, ஓபிஸ் தனி விளம்பரம் தந்ததும், எடப்பாடியாருக்கு எந்தவிதத்திலும் உறுதுணையாக இல்லாமல் இருப்பதும் உட்பட பல விஷயங்கள் BJP  மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக, போகிற இடமெல்லாம் அதிமுகவை சரமாரியாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்து வரும் நிலையில் , அவை எதற்கும் பதில் சொல்லாமல் ஓபிஎஸ் அமைதி காத்து வருவதும் டெல்லிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது .

அதனாலேயே ஓபிஎஸ் மீது பாரத பிரதமர் மோடிக்கு அதிருப்தியில்  இருப்பதாகவும் கூறப்படுகிறது .. இது தெரிந்துதான் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மோடி வந்த மறுநாளே திடீரென ஒரு ட்வீட்டை போட்டு திமுகவை பல மாசம் கழித்து விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.. அந்த ட்விட்டரில் 

''ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக.

திமுகவின் உண்மை முகம் தெரிந்து தான் ஆட்சி அதிகாரத்தை திமுகவிடம் கொடுக்காமல் மக்கள் தண்டித்துள்ளனர்.'' என்று பதிவிட்டுள்ளார் 


அதே நேரம்  இப்படியே உள்ளடி வேலை பார்த்து கொண்டிருந்தால், ஓரங்கட்டுப்பட்டு புறக்கணிக்கப்படுவோமா   என்று நினைத்துதான், 2 நாள் முன்னாடி நடந்த ஒரு  கல்யாணத்தில் முதலமைச்சர் எடப்பாடியாரை தூக்கி வைத்து புகழ்ந்துள்ளார் என்றும் சொல்கிறார்கள்.. இருந்தாலும், இவர் யார் பக்கம் என்பது இப்போது வரை குழப்பமாகவே இருக்கிறது" என்கிறார்கள் விடயம் அறிந்த அதிமுக நிர்வாகிகள் .

சசிகலா சிறையில் இருக்கும் போதே ஓபிஸ் சசிகலாவுடன் தொடர்பில் இருந்துள்ளார் அத்துடன் சசிகலா சிறையி இருந்து வெளியில் வரும்போது சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கலாம் என்ற மனநிலையிலும் இருந்துள்ளார் அனால் இதை அறிந்த முதல்வர் எட்டப்பாடியார் டெல்லி மேலிடத்தை தொடர்ப்பு கொண்டு நிலைமையை கூறியுள்ளார்கள் . உடனடியாக டெல்லி மேலிடம் ஓபிஸ் தொடர்ப்பு கொண்டு சசிகலா பாகம் போனால் உங்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை கிளற வேண்டி வரும் என்று ஒரு அஸ்திரத்தை ஏவியுள்ளார்கள் இதானால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கிய ஓபிஸ் இறுதியில் முதலவர் எட்டப்படியாருடன் இணைந்து போக முடிவு செய்துள்ளதாக உள் தகவல்கள் தெரிவிக்கின்றன.




Post a Comment

0 Comments

Close Menu