Ad Code

சசிகலா அதிமுக இணைப்பு விரைவில் கசியும் இரகசியம்

 சின்னம்மா சிறையில் இருந்து வந்து அமைதியாக இருக்கிறார் எல்லாம் காரணமாகத்தானாம் அதிமுகவின் மெகா புள்ளியை சின்னம்மா சசிகலா தட்டி தூக்கிவிடுவார் என பரவலாக கதைக்கப்டுகிறது .. அதற்கான அடிப்படை விடயங்கள் வலுவாக போடப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியில் கசிந்து உள்ளன .


பெங்களூர் சிறையில் இருந்து வரும்போது தொண்டர்கள் வழங்கிய வரவேற்பை கண்டு சசிகலா ஒருகணம் அதிர்ந்து இருக்கிறார் தனக்கு இப்படி ஆதரவு இருக்குமென அவர் நினைத்தது பார்க்கவும் இல்லையாம் ஆனால் அதற்க்கு பிறகு தி.நகர் வீட்டுப்பக்கம் எந்த அதிகமுக நிர்வாகிகளையும் காணவில்லையாம் .

இதனால் , சசிகலா மிகவும்  ஜாக்கிரதையான அரசியல் காய்நகர்த்தலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.. அந்த வகையில் அதிமுகவின் மிக முக்கிய பொறுப்புக்களில் உள்ள நபர்களை தன்பக்கம் இழுக்கும் வேலையிலும் இறங்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.. அந்த வகையில் ஒன்று இரண்டு  நபர்கள் பெயர் அடிபட்டது போலவே, இப்போதும் ஒருபெயர் அடிபட்டுள்ளது.



அவர்தான் சசிகலாவின் ஆதரவாளரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் ஆவார். இவர் சசிகலாவால்தான் அரசியலில் வளர்க்கப்பட்டவரும் ஆவர் .. எனினும், சசிகலா ஜெயிலில் இருந்தபோதுகூட, வெகு சாமர்த்தியமாக தன்னை அதிமுக தலைமையிடம் நெருக்கமாக வைத்து கொண்டார். எனினும், சமீப காலங்களில் டெல்டா அரசியலின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும் ஒரு வருத்தம் இவருக்கு இருக்கத்தான் செய்கிறது.இந்த வருத்தத்தை தனக்கு சாதகமாக சசிகலா தரப்பு பயன்படுத்த முயன்று வருகிறது.

சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு இவரது நிலைப்பாடு சற்று தள்ளாட்டத்தில் உள்ளதாகவே சொல்லப்பட்டு வந்தது.. ஏனென்றால், சசிகலா மீது சிவி சண்முகம், ஜெயக்குமார், போன்றோர் டிஜிபியிடம் புகார் கொடுக்க சென்றபோது, வைத்திலிங்கமும் செல்ல வேண்டியதாம்.. ஆனால் கடைசி நேரத்தில் போகவில்லை.. அதேபோல, மற்ற அமைச்சர்கள் கடுமையான  கருத்தை சசிகலாவுக்கு எதிராக முன்வைத்தும், வைத்திலிங்கம் வாய் திறக்காமல் மௌனம் காத்தார். அப்போதே ஒரு சந்தேகம் அதிமுக  கட்சிக்குள் எழ ஆரம்பித்துவிட்டது.

அதிமுக கட்சியின் மிகவும்  முக்கியமான கட்சி நிர்வாகி, ஏன் அமைதி இருக்கிறார் ? ஒருவேளை டெல்டா  சமுதாய பாசமா? என்ற அதிமுக கட்சி தலைமைக்கு குழப்பமும் ஏற்பட்டது  . இதற்கு காரணம், மத்திய அமைச்சர் பதவி மீது  வைத்திலிங்கம் அவர்களுக்கு ஒரு ஆசை இருந்துகொண்டே இருந்தது.. கிட்டத்தட்ட இவர்தான் மத்திய அமைச்சர் என்ற செய்திகளும் வெளியாக ஆரம்பித்து இருந்தது .. ஆனால் , இறுதி  நேரத்தில் ஓபிஆர் க்கு அந்த பதவி  சென்றுவிட்டது .. இதனால் அதிமுக தலைமை மீது  மேலும் வருத்தம் இவருக்குள் கூடியது. அதனால்தான், சசிகலாவுக்கு வைத்திலிங்கம் ஆதரவு தருவாரோ என்ற சந்தேகம் இன்னமும் அனைவரிடமும் உள்ளது.

தமிழக சட்ட சபை தேர்தலில் அதிமுக கட்சியானது ஒற்றுமையாக இருந்தால்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது ஆகவே நாங்கள் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்கவேண்டும் என நேற்று நடந்த அதிமுக கூடடத்தில் வைத்தியலிங்கம் கடுமையாக தெரிவித்திருந்தார்.அதிமுக   அமமுக கட்சிகளின் இணைப்பை அவர் இதன் மூலம் வலியுறுத்தி இருந்தார் என் பரவலாக பேசப்படுகிறது.


அதத்துடன் , இந்த முறை ஒரத்தநாடு தொகுதியில், போட்டியிடும் வாய்ப்பை வைத்திலிங்கம் கேட்டு வருகிறார்.. ஒரத்தநாட்டில் தினகரனின் அமமுகவுக்குதான் வாக்கு  வங்கி அதிகமாக அதிகமாக உள்ளது.. ஒருவேளை கட்சிகள் இணைந்துவிட்டால் வைத்திலிங்கத்தக்கு ஒரத்துநாடு நிச்சயம் தரப்படும் .. இல்லாவிட்டால், அமமுக சார்பில் மாவட்ட செயலர் சேகர் போட்டியிடவே வாய்ப்பு இருப்பதாகவும் கதை அடிபடுகிறது .


அதிமுக அமமுக இணைப்பு குறித்து தினகரன் மட்டுமே தற்பொழுது கதைத்து வருகிறார் வேறு எவரும் இணைப்பு குறித்து எந்த கதையும் கதைப்பதில்லை பாரத பிரதமர் மோடி வரும்போது இணைப்பு  நடக்கலாம் என்று ஒரு தகவலும் கசிந்தது அனால் அப்படி எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை.

தற்பொழுது அதிமுக கூட்டத்தில் அதிமுக அமமுக இணைப்பு குறித்து பேசியவர் சசிகலாவின் ஆதரவாளரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் ஒருவர் ஆகும்.

இப்போதுதான் ஒருவர் தந்து குரலை தெரிவித்துள்ளார் இந்த குரல்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் அதிமுக அமமுக இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடந்து அதில் சின்னம்மா சசிகலாவை அதிமுகவின் பொது செயலளர் ஆக்கி முதல்வராக எடப்படியாரை ஆக்குவதே தற்பொழுது முக்கிய அதிமுகவின் பிரமுகர்கள் விரும்புவதாக இரகசிய தகவல் கசிந்துள்ளது .

இந்த தகவல் உறுதியானால் அதிமுகவே மீண்டும் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி அடையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள் இல்லாவிடில் அதிமுகவின் வெற்றியை தினகரன் தரப்பு வெகுவாக குறைத்துவிடும் அதனால் திமுக ஆட்சியமைக்கும் நிலை உருவாக்கலாம் இப்படியான நிலை வரக்கூடாது என்பது மைத்தியில் உள்ள பாஜக அரசும் விரும்புகிறது ஆகவே அதிமுக அமமுக இணைப்பு இறுதியில் நடந்தே தீரும் என கூறப்படுகிறது அதற்கான பேச்சுவார்த்ததை இரகசிய முறையில் நடைபெறுவதாகவும் யாருக்கு என்ன பதவிகள் என்பதில் இழுபறி நிலவுவதாகவும் அது நிறைவடைந்த பின் அறிவிப்பு வெளிவரலாம் என கூறப்படுகிறது அதுவரை அதிமுக நிர்வாகிகள் மிகவும் மௌனமாக இருக்கிறார்கள் 





Post a Comment

0 Comments

Close Menu